Advertisment

இந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத! கவுண்டமனி தரப்பு பதிலடி...

goundamani

எந்த பரபரப்பும் இல்லாத நேரத்தில் திரை பிரபலங்கள் குறித்து வதந்திகளைச் சிலர் பரப்பி வருவார்கள். ஏற்கனவே கவுண்டமணி பற்றியும் அவரது உடல்நிலை குறித்தும் வதந்திகள் வெளிவந்தன. அதற்கு கவுண்டமணி தரப்பும் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறது.

Advertisment

இந்நிலையில் இன்று காலையிலிருந்து நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கவுண்டமணி தரப்பை,இதுகுறித்து கேட்டுப் பலரும் தொடர்பு கொண்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவுண்டமணி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கவுண்டமணி மிகவும் நலமாக உள்ளதாகவும், அவர் அடுத்து படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இதுபோன்று வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்” என்றுஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கவுண்டமணியின் வழக்கறிஞர், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்துள்ளார்.

goundamani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe