Advertisment

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கொரில்லா...

நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று, இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகி ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.

Advertisment

gorilla

இதனையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயரையும் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அறிவித்ததைபோல் ஆறு மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டரில் வயதான விஜய் மற்றும் கால்பந்தாட்ட வீரர் போன்ற இளம் விஜய் என்று இரு தோற்றங்களில் இருக்கிறார் விஜய். முன்பே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு ‘பிகில்’ என்றே பெயரிட்டுள்ளனர்.

Advertisment

பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஜய்க்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜீவா நடித்திருக்கும் கொரில்லா படக்குழு, நேற்று வெளியான பிகில் படத்தின் இரண்டாவது லுக்கை கொரில்லா பார்த்து ரசிப்பதுபோல வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஹிந்தி எதிர்ப்பை காட்டும் விதமாக இப்படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gorilla actor vijay bigil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe