gorilla

Advertisment

ஜீவா முதல்முறையாக சிம்பான்சி குரங்குடன் நடிக்கும் படம் 'கொரில்லா'. ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இப்படத்தில் நாயகியாக ஷாலினி பாண்டே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிடவுள்ளதாக படக்குழு சமூகவலைத்தளத்தில் தற்போது அறிவித்துள்ளது.