
'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ்..
இந்நிலையில் அவருடைய அடுத்த படமும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 'இரண்டாம் குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படம் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், இப்படத்தின் டீஸர், போஸ்டர் அனைத்தும் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தின் டீஸரை தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)