/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/115_5.jpg)
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.
தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் கடந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மனோபாலா இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)