Advertisment

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கௌரவித்த கூகுள்... ரசிகர்கள் மகிழ்ச்சி!

Sivaji Ganesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கௌரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த தினமான இன்று (01.10.2021) சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. வரலாற்றின் முக்கிய நாட்களை நினைவுகூர்வதற்காகவும், அரசியல் தலைவர்கள், கலைத்துறையினர், அறிவியல்துறையினர் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கௌரவிப்பதற்காகவும் இதுபோன்ற டூடுலை கூகுள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினமான இன்று இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

மூன்று தோற்றங்களில் சிவாஜி காட்சியளிக்கும் இந்த டூடுலை நூபூர் ராஜேஷ் சோக்ஸி வடிமைத்துள்ளார். கூகுள் அளித்துள்ள இந்தக் கௌரவத்தை சிவாஜி குடும்பத்தார் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கூகுளுக்கும், இந்த டூடுலை வடிமைத்த நூபூர் ராஜேஷ் சோக்ஸிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

actor sivaji ganesan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe