விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. சமுத்திரக்கனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன்ட் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் மில்டன், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

samuthra

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சமுத்திரக்கனி பேசியது...

ஒரு நல்ல விஷயம் அதை சொல்ல வேண்டும். வாழ்க்கையில் சரியான நேரத்தில் ஒன்று வரும், அதைப்பிடித்துக்கொண்டால்‘உன் வாழ்க்கைக்கு நீ முதலாளி’. மிஸ் பண்ணிவிட்டாயென்றால் ‘அடுத்தவனுடைய வாழ்க்கைக்கு நீ கடைசி வரைக்கும் தொழிலாளி’ இது தான் உண்மை. இதைநான் என் வாழ்க்கையிலும்பார்த்திருக்கிறேன். நிறைய நண்பர்களையும் பார்த்திருக்கிறேன். உண்மையா, நேர்மையா ஒரு திரைப்படம் இது. நண்பன் கௌதமோடு பயணித்தது நல்ல அனுபவம். நான் அடிக்கடி கேட்பேன், "என் கூட நடிங்க, இல்ல என்னைவைத்து படம் எடுங்க" என்று.கடைசியில் பார்த்தாநாங்க இரண்டு பேரும் நடித்தோம், விஜய் மில்டன்எடுத்தாரு. ரொம்ப சந்தோஷமாக இருந்தது இந்த பயணம்.