Advertisment

‘குட் பேட் அக்லி’; பெண்களுக்காக திரையரங்கம் எடுத்த முன்னெடுப்பு

good bad ugly special fdfs for ladies only in thiruppur theatre

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களுடன் ஷாலினி மற்றும் அவரது மகள், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

Advertisment

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியைப் பெண்கள் மட்டும் கண்டுகளிக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த திரையரங்க நிர்வாகம் ஈரோட்டிலும் திரையரங்கம் நடத்தி வருவதால் அங்கேயும் இது போன்று செய்துள்ளது. காட்சி தொடங்குவதற்கு முன்பாக படம் பார்க்க வந்த பெண்களுக்கு அந்த திரையரங்க நிர்வாகம் சார்பில் ரோஜா பூ கொடுத்து வரவேற்பக்கப்பட்டது.

tirupur ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe