good bad ugly movie leaked in internet

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கீதா ஜீவன் திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு படத்தையும் பார்த்து மகிழ்ந்தார்.

சென்னையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாகி ஒரு நாள் கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் அதற்குள் முழுப் படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.