Advertisment

‘ஏ.கே....’ - தொண்டை கிழிய கத்தும் ஆதிக் ரவிச்சந்திரன்

Good Bad Ugly First Single OG Sambavam promo released

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Advertisment

முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிறிய வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டது. பின்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான் எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

Advertisment

இதைத் தொடர்ந்து டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது. அதோடு வருகிற 18ஆம் தேதி ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) என்ற முதல் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஓஜி சம்பவம்’ பாடலின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். ‘திரையரங்கம் செதரட்டும், இவன் பேர் முழங்க கலக்கட்டும், பொடுசுங்களாம் கதறட்டும், விசில் பறக்கட்டும்...’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இறுதியில் ஆதிக் ரவிச்சந்திரன், ‘ஏ.கே’ என தொண்டை கிழிய கத்தும் வரி இடம்பெறுகிறது. இப்படத்தின் அஜித்தின் கதாபாத்திரம் ஏ.கே. என்பது குறிப்பிடத்தக்கது. முழு பாடல் நாளை மாலை 5.05 மணிக்கு வெளியாகிறது.

ACTOR AJITHKUMAR adhik ravichandran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe