/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-06-09 at 9.35.52 AM.jpeg)
'கோலிசோடா' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் தற்போது கோலிசோடா 2ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.இயக்குனர்கள் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சுபிக்ஷா, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, மற்றும் ஸ்டன்ட் சிவா உட்பட பல நட்சத்திரங்கள் இவர்களுடன் நடித்துள்ளனர்.
இப்படத்தின் நாயகி சுபிக்ஷா படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேசுகையில்...
"கடுகுபடத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை 'கடுகு' சுபிக்ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும் என நான் எதிர்பார்க்கவேயில்லை. படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார் இயல்பாக நடித்தாலே போதும் இக்கதாபாத்திரத்திற்காக முன்கூட்டியே தயாராக தேவையில்லைஎன்றார்"என்றார்.
Follow Us