பள்ளியில் ரஜினி, விஜய் படங்கள் திரையிடல்; விசாரணையில் நிர்வாகம் விளக்கம்

goat vettaiyan movie screened in school

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி நடித்த வேட்டையன் மற்றும் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படங்கள் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி படத்துக்கு ரூ.10 கட்டணமும், விஜய் படத்துக்கு ரூ.25 கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த இந்து முன்னணி கட்சியினர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் அக்குழு பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளது. அப்போது பள்ளி மாணவர்கள் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் படத்தை திரையிட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் வேட்டையன் திரைப்படத்தில் நீட் தொடர்பான கருத்துக்கள் இருப்பதால் திரையிடப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அதோடு விசாரணையில் முடிவில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Greatest of All Time Tirunelveli Vettaiyan
இதையும் படியுங்கள்
Subscribe