/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Yuvan.jpg)
தமிழ் சினிமாவில் தன் காமெடி கலந்த கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்போது விஜய்யை வைத்து, 'THE GOAT' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் THE GOAT படம் பற்றிய அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என்று சிரித்தபடி சொன்னவர், பிறகு “இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், The Goat திரைப்படம் நன்றாக எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
THE GOAT படத்தின்முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இடையில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால் இன்னும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)