the goat censor update

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்திலிருந்து இதுவரை ‘விசில் போடு...’,‘சின்ன சின்ன கண்கள்...’,‘ஸ்பார்க்...’ ஆகிய பாடகள் வெளியாகியுள்ளது. இப்பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஆனால் விஜய் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவும் கடந்த 17ஆம் தேதி வெளியான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படக்குழு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து, படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் நடிக்க வைக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்.