சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்தவர் ஞானவேல்ராஜா. தற்போது இவர் மகாமுனி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். மௌனகுரு என்ற படத்தை இயக்கிய சாந்தகுமார் எட்டு வருடங்கள் கழித்து ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் மகாமுனி. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

ajith fanS

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர் அஜித் குறித்து பேசியுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், அஜித்திடம் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் பாசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. அஜித் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர், அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது, வெறியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர் தொடர்ந்து ஹிட் அதிகமாக கொடுக்கவில்லை என்றால் அவரது ரசிகர்களின் கோபப்படுவார்கள் அல்லது பின்வாங்குவார்கள். ஆனால், இவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்” என்று ஞானவேல்ராஜா அஜித் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.