"இந்தப் படம் பார்க்கும் அனைவரும் அம்மாவை மிஸ் பண்ணுவாங்க" - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு!

Gnanavel Raja

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேள்' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, நேற்று (16.11.2021) மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஏ. ஹரிகுமார் இயக்க, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவிற்கு அம்மாவாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். C. சத்யா இசையமைத்துள்ளார்.

">ad

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், "ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எப்போதுமே கமர்ஷியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களைத் தந்துவருகிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே இப்படம் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறகு பள்ளிக்காலத்திலிருந்தே பிரபு தேவா சாரின் அதிதீவிர ரசிகன் நான். அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள்.இருவரும் அவர் படத்தை ஒன்றாகத்தான் பார்ப்போம். ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்றபோது, பிரபு தேவா சார் ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிரபு தேவா சார் தன் வேலையில் கச்சிதமாக இருக்கக் கூடியவர். அவர் இடத்திலிருந்து எனக்கு சிறு பிரச்சனை கூட வரவில்லை. இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பைத் தந்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்படி ‘டாக்டர்’ படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதேபோல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள். யோகி பாபுவுக்கும் நாயகிக்கும் கூட அதிக வசனங்கள் இருந்தது. இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் பண்ணுவாங்க. இப்படம் மிகச்சிறந்த குடும்ப திரைப்படமாக இருக்கும்" எனக் கூறினார்.

producer gnanavel raja
இதையும் படியுங்கள்
Subscribe