ADVERTISEMENT

'நான் ஆட்டத்தை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு...' வெளியானது வலிமை க்ளிம்ஸ்! 

06:38 PM Sep 23, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சிகளின் சிறு தொகுப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான பைக் ரேஸ் காட்சிகள் நிறைந்த இந்த க்ளிம்ஸ், சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT