Advertisment

சரத்குமாருடன் என்ன பிரச்சனை, வரலக்ஷ்மியுடன் என்ன உறவு!!! -விளக்குகிறார் விஷால் தந்தை ஜி.கே.ரெட்டி

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர் விஷால். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் 'இரும்புத்திரை'. இந்த நிலையில் விஷாலின் கைவசம் சண்டக்கோழி-2 உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரைக்கு வர காத்துக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி அவர்களுடனான ஒரு ஜாலியான ஒரு பேட்டி.

Advertisment

GK

நீங்கள் சரத்குமாரை வைத்து மகாபிரபு, ஐ லவ் இந்தியா என்ற படங்களை தயாரித்தீர்கள். அந்த சரத்தையே நடிகர் சங்கத்தில் உங்க பையன் விஷால் ஜெயித்தும், இன்னும் ஜெயித்து கொண்டும் இருக்கிறார். சரத்குமார் கொள்கையிலிருந்து இவர் மறுபடுகிறார் இதற்கு ‘மகாபிரபுவும் 'ஐ லவ் இந்தியாவும்தான்' காரணமா?

Advertisment

அப்படி இல்லை, அதுக்கும், இதுக்கும் சம்மந்தம் இல்லை. விஷால் நடிகன் ஆனதற்கு மாகபிரபுவும், யாரும் உதவி செய்யவில்லை. நான் 86ல் இருந்து தயாரிப்பாளராக இருக்கிறேன். விஷால் 2004, 2005 தான் திரைக்கு வந்தார். அதனால் அதுக்கும், இதுக்கும் சம்மபந்தம் இல்லை. அதுமட்டுமில்லாமல் சரத்குமார் ஒரு சீனியார் மோஸ்ட் ஆர்ட்டிஸ்ட், யங்ஸ்டர்ஸ் வரும்போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவன் வந்துவிட்டான் எதிர்த்து நின்றுவிட்டான் என்று அவர்களிடம் சேலஞ்ச் பண்ணக்கூடாது. யங்ஸ்டர் முன்வந்து நல்ல வளர்ச்சியை கொண்டுவர்றோம் என உங்களுக்கு சேலன்ஞ் செய்தால் பெரிய ஆட்கள் அவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆகவே எப்போதும் யங்ஸ்டருக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும், கொடுத்துபார்க்கணும் அதில் தப்பு இல்லை.

ஒரு பக்கம் விஷால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து கொண்டு இருந்தாலும், மற்றொரு பக்கம் அவரது மகள் வரலெட்சுமியை தான் உங்க வீட்டு மருமகளா, மகாலெட்சுமியா அழைச்சிட்டு வர இருப்பதாக ஒரு கிசுகிசு வருகிறது. இந்த கிசுகிசு உங்க காதுக்கும் வந்து இருக்கும் என்று நினைக்கிறோம் வந்துச்சா? இல்லையா? அதன் உண்மை நிலை என்ன ?

சரத்குமார் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவரை சினிமா போறத்துக்கு முன்னாடியே தெரியும். நான் பெங்களூரில் காலேஜ் சேர்ந்தப்போ, வேலைக்கு சேர்ந்தப்போ இவரும் பெங்களூருவில்தான் இருந்தார். அவர் பாடி பில்டர். எனக்கு சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நண்பர்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களை விடக்கூடாது. நண்பர்கள் எப்போதும் நமக்கு தேவைப்படுவார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் ‘friends always good’. எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள். அதுபோல சரத்குமாரும் எனக்கு நல்ல நண்பர்.

சரத்குமார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் ரொம்ப நல்லவர். ஆனால் எந்த அளவுக்கு நல்லவரோ அந்த அளவுக்கு மாறுகிறார். நான் நல்லவர் என்றும் சொல்லமாட்டேன். கெட்டவர் என்றும் சொல்லமாட்டேன். நல்ல நண்பர். ஆனால் நான் மாகபிரபு, ஐ லவ் இந்தியா படம் எடுக்கும்போது, போதும்,போதும் கண்ணா வாழ்க்கையில் இந்த மாதிரி படம் எடுக்க தேவையேயில்லை. i got vegas, ஐ காட் ஃபெட்அப் இந்த சினிமா வாழ்க்கையில் நிறைய ட்ரபிள் ஃபேஸ் பண்ணி இருக்கேன். அவரால் ஃபேஸ் பண்ணி இருக்கேனோ இல்ல வேற யாரால் ஃபேஸ் பண்ணி இருக்கானோ அது மக்களுக்கு தெரியும். இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சினிமாவில் இரண்டு ரிவேஜ்ச் இருக்கு ஒன்று பெர்ஃபாமன்ஸ் மற்றொன்று சேலஞ்ச் நான் நல்லா பேசியிருந்தால் எல்லா மகிழ்ச்சியாக இருப்பார்கள் அது பெர்ஃபாமன்ஸ். சேலஞ்ச் என்றால் ஏய் நான் என்னத்த பேசுறது, விடுப்பா அதுவந்து கிரிமினல் மைன்ட். கடவுள் அதுக்கு கண்டிப்பபாக தண்டனை கொடுப்பார். யாரும் தப்பிக்க முடியாது.

நாங்களும் பத்துவருடமாக சொல்லிக்கிட்டுதான் இருக்கோம். அவன் எதாவது கதை சொல்லி தட்டிக் கழிச்சிக்கிட்டு இருக்கிறான். சிவாஜி சார்ல இருந்து, ரஜினி சார்ல இருந்து எல்லாருமே ஒரு இரண்டு படம் பண்ணவுடன் ஒரு லிக் உருவாகும் அது சகஜம். அதுபோலதான் லட்சுமி மேனன். அதுபோல சொன்னங்க, அது எல்லாம் தப்பு.

GK reddy

நான் ஒரு ஜோக் சொல்றேன். நாகேஷ் சார் தில்லானமோகனம்பாள் படத்தில் ஒரு காமெடி ‘யாரும் வரமாட்டாங்க. எல்லாம் வாங்கடா பக்கத்துவிட்டு பத்தி பேச வேண்டும் வாங்கடா என்பார் உடனே வந்துடுவாங்க. என்னடா இது பக்கத்துவிட்டு பொண்டாட்டி பத்தி பேச வேண்டும் என்றால் உடனே வந்துடுவிங்களா’ அதுமாதிரிதான் சினிமா பீல்டில் அடுத்தவன் பத்தி பேசுவதுதான் கவலை.

என் பையனுக்கு கல்யாணம் ஆகவில்லை, அப்பாவாக எனக்கு கவலையாகதான் இருக்கு. அவன், டாடி தங்கச்சிக்கு கல்யாணம் ஆகட்டும் நான் பண்ணிக்கிறேன். என்று சொன்னான். இப்ப அவங்களுக்கும் கல்யாணம் ஆகிகவிட்டது. இப்ப என்னவென்றால் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்துவிட்டு பண்ணிக்கிறேன் என்று சொல்கிறார். நாங்க சொன்னோம் சரி, உனக்கு எப்போ இன்டிரஸ்ட் வருகிறதோ அப்ப சொல்லு என்று. ஒரு மாதம் டைம் கேட்டு இருக்கான் பார்ப்போம். ‘

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் விஷாலுடைய நண்பர்ஆர்யாகடைசி வரை யாரையும் கல்யாணம் பண்ணவில்லை.

அது ஒரு நிகழ்ச்சி. மக்கள் எல்லாம் என்ஜாய் பண்ணறத்துகாக செய்தது. யாராவது ஏமாந்த பெண் இருந்து இந்த மாதிரி பையன் கிடைத்தால் ரொம்ப கவனமா இருக்க வேண்டும் என்பதற்காகதான் அந்த நிகழ்ச்சி எடுத்து இருக்கிறார்கள். இது வந்து எல்லாருக்கும் ஒரு மெசேஜ். இந்த மாதிரி நடக்கும் எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள் என்று எடுத்து காண்பித்திருக்கிறார்கள். ஆர்யாவும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எது நடக்குதோ இல்லையோ நடிகர் சங்கம் கட்டிடம் திறந்தவுடன் முதல் கல்யாணம் விஷாலுக்குதான்.

vishal Gk reddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe