
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் மீது இளம் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளார். நடிகர் ஆர்யாவுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாயிஷா உடன் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா, தான் நடித்த ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் தெரிவித்துள்ளார். தற்போது, ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் விட்ஜா, ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், பணத்திற்கு கஷ்டப்படுவதாகக் கூறிய ஆர்யா, தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். பிரபல நடிகரான ஆர்யா மீது, பெண் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us