Advertisment

'ஜிஞ்சர் சோடா...' அனிருத் குரலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் சேதுபதி பட பாடல்!

Ginger Soda

Advertisment

இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் படக்குழு வரிசையாக வெளியிட்டுவரும் நிலையில், 'ஜிஞ்சர் சோடா...' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கான வரியை கார்த்திக் எழுத, அனிருத் மற்றும் யாஷிதா ஷர்மா இணைந்து பாடியுள்ளனர். சமீபகாலமாக அனிருத் குரலில் வெளியாகும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், 'ஜிஞ்சர் சோடா...' என்ற இந்தப் பாடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe