‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தில் 'கில்லி' படபாடல் இடம் பெற்றுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கபடி கபடி பாடல் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் 'கில்லி' படத்தில் இடம் பெற்ற "அர்ஜுனரு வில்லு..."பாடல் இடம்பெற்றுள்ளதாககூறப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.