வாகைச்சூடவா படம் மூலம் தமிழ் சினிமாவில் பெரிதும் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான் தற்போது இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, கடாரம் கொண்டான், மஹா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் இவர் நடிகர் அஜித்தை சமீபத்தில் நேரில் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று கூறியுள்ளார். அதற்கு 'அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக' ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'அஜித் கூறியது என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது' - ஜிப்ரான் பூரிப்பு
Advertisment