Advertisment

'ஏகே 61' படத்தில் இணையும் ஜிப்ரான்?

Ghibran joining ak61 movie

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'வலிமை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்கரோனாபரவலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்துநடிகர் அஜித்தின் 61 வது படத்தை எச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எச். வினோத் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்திற்குஇசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர்எச் வினோத் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR AK61 ghibran
இதையும் படியுங்கள்
Subscribe