Published on 16/05/2019 | Edited on 16/05/2019


அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார். ரீமேக் படமாக இல்லாமல் எச்.வினோத்தின் சொந்த கதையில் உருவாகும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படமாக இது உருவாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படப்பிடின்போது ஜிப்ரானிடம் ‘இணைந்து பணியாற்றலாம்’ என்று அஜித் கூறியதாக ஜிப்ரான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.