Ghibran

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்தது. ஒரு சண்டைக் காட்சியைத் தவிர்த்து எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், வலிமை படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது.

இந்த நிலையில், அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகளை இந்தாண்டின் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகர் அஜித்தின் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.