தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசை அமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசைக்கு பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்துகிறார்.

anirudh

Advertisment

Advertisment

தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கும் சிக்ஸர் படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் அனிருத்.

இதுகுறித்து ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனிருத் அடித்த ஒரு சிக்ஸர் ஷாட். எனது இசையில் அனிருத் முதன்முறையாக பாடியுள்ளார். "பாபா பிளாக் ஷிப்" என தொடங்கும் பாடலை பாடியுள்ளார்'. என பதிவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.