german tourist watch vettaiyan movie

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Advertisment

கல்வி மற்று போலீஸ் என்கவுன்டர் குறித்துப் பேசியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் லைகா நிறுவனம் ரசிகர்களின் வரவேற்பு காரணமாக கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.240 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கடந்த 14ஆம் தேதி தெரிவித்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தை ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ள அவர்கள் கும்பகோணத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர். பின்பு வெளியே வந்த அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான மூதாட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “நாங்கள் இரண்டு வாரங்களாக இங்கு தங்கியிருக்கிறோம். படம் சிறப்பாக இருந்தது. ஆனால் எனக்கு கொஞ்சம் சத்தமாக இருந்தது. பரவாயில்லை” என்றார். பின்பு செய்தியாளர்களிடம் படத்தில் நடித்த ஹீரோவிற்கு என்ன வயது என அவர் கேட்க, 70க்கு மேல் என தெரிந்ததும், “70 வயதா. பரவாயில்லை என்னை விட கொஞ்சம் தான் அதிகம்” என சிரித்தபடி பதிலளித்தார்.