Advertisment

முத்தக் காட்சிக்கு 80 டேக்; ஜார்ஜ் குளூனி பகிர்ந்த தகவல்

George Clooney and Julia Roberts get 80 take for a kiss scene

ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி நடிப்பில் கடைசியாக 'தி மிட்நைட் ஸ்கை' படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தற்போது 'டிக்கெட் டூ பாரடைஸ்' படத்தில் தயாரித்து நடித்தும் உள்ளார். ஜார்ஜ் குளூனிக்கு ஜோடியாக ஜூலியா ராபர்ட்ஸ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரோமோஷன் பணிகளில் ஜார்ஜ் குளூனியும் ஜூலியா ராபர்ட்ஸும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சி குறித்து படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய நிகழ்வை பகிர்ந்தார். இது தொடர்பாக ஜார்ஜ் குளூனி கூறியதாவது, "இந்த படத்தில் ஒரு முத்தக்காட்சிக்காக 80 டேக்குகள் எடுக்கப்பட்டது. அதை என் மனைவியிடம் சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்தார்.' எனக் கூறினார். மேலும் ஜூலியா ராபர்ட்ஸ், "79 டேக்குகளில் சிரித்து விட்டோம். கடைசியில் 80-வது டேக்கில் தான் சரியாக நடித்தோம்" எனப் பேசினார்.

Advertisment

இதற்கு முன்பு ஜார்ஜ் குளூனியும் ஜூலியா ராபர்ட்ஸும் இணைந்து 'ஓஷன்ஸ் லெவன்', 'மணி மான்ஸ்டர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

hollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe