Advertisment

“நான் விரும்புவதை தவிர வேறு ஒன்றையும் உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்”- ஜெனிலியா நெகிழ்ச்சி!

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisment

riyan with genelia

இந்நிலையில் இந்த ஜோடிக்கு 2014ஆம் ஆண்டு ரியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 2016ஆம் ஆண்டு ரேயல் என்ற இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது மூத்த மகனின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய ஜெனிலியா, உருக்கமாக ஒரு பதிவு ஒன்றை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அதில், “அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் அவன் வளர வேண்டாம். இப்படியே இருக்கட்டும் என்று கூறுவார்கள். நான் அப்படியல்ல, உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் ரசிக்க விரும்புகிறேன். நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்.

நீ நல்ல இளைஞனாக வளர்வதை பார்க்க விரும்புகிறேன். நீ கடுமையானவன். எப்போது என்ன நடந்தாலும் உன்னை நம்ப வேண்டும். நான் எப்போதும் உன்னை நம்புகிறேன். வாழ்க்கை கடினமானது என்று நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். அதோடு, நான் விரும்புவதை தவிர வேறு ஒன்றையும் உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்ன என்றால் நான் உன்னை நேசிக்கிறேன். நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். என்னை அம்மாவாக்கிய சிறுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- என் முதல் பிறப்பு” என்று உருக்கமாக தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார் ஜெனிலியா.

Bollywood genelia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe