/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_166.jpg)
பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகை ஜெனிலியா மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"நிஷிகாந்த் காமத் நீங்கள் ஒரு கனிவான மனிதர்.. நான் உங்களிடம் ஒரு வாழ்க்கை பயிற்சியாளரைக் கண்டேன்.. நாம் விவாதித்த அளவுக்கு நான் வாழ்கிறேன். அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு அற்புதமான ஆத்மா என்பதை அறிந்து நான் வாழ்கிறேன். நம் பாதைகள் சந்தித்ததில்நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அன்பான நிஷி.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)