மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இது அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் 8 தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

Advertisment

nerkonda

Advertisment

தற்போதுதான் இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை யாருக்கு வழங்குவது என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

அஜித் நடித்திருந்தும் இந்தப் படத்தின் வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பயப்படுவதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்தப்படத்தின் தமிழக திரையரங்க உரிமைக்காக தயாரிப்பு நிறுவனம் கேட்கும் விலை கிட்டதட்ட 60 கோடிக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. இதனால் பல விநியோகஸ்தர்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டியுள்ளார்கள். அதுவும் அஜித் அதிக நேரம் படத்தில் வரமாட்டார் என்று கூறப்படுகின்ற நிலையில், ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம் என்று பெரிய தலைகள் ஒதுங்கி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸும், ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இந்த படத்தின் உரிமையை வாங்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்பட்ட நிலையில் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு விநியோக உரிமையை விற்றுள்ளது தயாரிப்பு குழு என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.