/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/103_9.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே. உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சீனு ராமசாமி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்தார்.
சீனு ராமசாமி கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்துப்போனதால் அவரும் உடனே சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. தற்போது ஆரம்பக்கட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகிவருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர், இப்படத்தில் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியராக நடிக்கவுள்ளார். சீனு ராமசாமியின் எட்டாவது படமான இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேனியில் தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)