Gayathri Raguram talk about surya rocketry movie

Advertisment

இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது. மேலும்திரைபிரபலங்கள்பலரும்படத்தைபார்த்துபாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்ராக்கெட்ரிபடத்தைபார்த்த காயத்ரி ரகுராம் தனதுட்விட்டர்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராக்கெட்டரிபடத்தில் சூர்யாசிறப்புதோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில்டைலாக்கின்முடிவில் அனைவரும்ஜெய்ஹிந்த்என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும்ஜெய்ஹிந்த்சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா?இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள்எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர்.