Advertisment

“இது பெரிய ஜோக்”- விஜய்சேதுபதியை விமர்சித்த பிக்பாஸ் காயத்ரி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

vijay sethupathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள தனியார் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் படக்குழுவிலுள்ள பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். திருநெல்வேலியில் ஷூட்டிங்கிலிருந்து இந்த விழாவில் கலந்துக்கொண்டார் விஜய் சேதுபதி.

அப்போது அவர் மேடையில் பேசும்போது, “கடவுளை காப்பாற்றுகிறேன் என்று சொல்லும் மனிதர்களை நம்பாதீர்கள். உங்களுடைய மதம் குறித்து அவதூறாக பேசினால் அதற்கு உங்களுடைய மதத்திலிருந்து பதிலளிக்காமல் மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் கற்றுக்கொடுங்கள்” என்று பேசினார்.

இந்நிலையில் இதை விமர்சித்து பிக்பாஸ் காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மற்ற மனிதர்கள் மீதான உங்களின் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கான நம்பிக்கைவாதிகள் உள்ளனர். நாங்கள் அனைவரும் முட்டாள்கள் என நீங்கள் நினைத்தால், பொய்களையும் வெறுப்பையுமே பரப்பும் மற்ற நபர்களை நம்பும் உங்களுக்காக நான் வருந்துகிறேன். வாழ்க்கையே கடவுளால் வடிவமைக்கப்பட்டதுதான்.

இன்றைய உலகில் சக மனிதர் உங்களுக்கு உதவி செய்து, உங்களை உயர்த்தி அதனால் அவரும் மகிழ்வார் என நினைப்பது ஒரு பெரிய ஜோக். அப்படி ஒருவர் உயர்த்திவிட்டால், அதற்கு அவருடைய தெய்வீக தன்மையும், தெய்வ பற்றுமே காரணமாஅக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Gayathri Raghuram Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe