Published on 06/02/2019 | Edited on 06/02/2019

திருமதி கௌதமி சென்னையில் நேற்று உலக கேன்சர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் காண மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். வி.எஸ். மருத்துவமனையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார். சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும். இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்' என்றார் கௌதமி. மேலும் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.