Advertisment

'தளபதி 67' ; வில்லனாக களமிறங்கும் இயக்குநர்

gautham vasudev menon to act villain in vijay thalapathy 67

விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சமந்தா, த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலம் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் மற்றுமொரு பிரபலம் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியாகியுள்ள தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக விஜய்க்கு வில்லனாக களமிறங்கவுள்ளார் கௌதம் மேனன்.

Advertisment

lokesh kanagaraj gauthammenon thalapathy 67 actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe