மோகன் குரு செல்வா இயக்கத்தில் தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்ஸ்ஜில்லா’. கௌதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரோடு ரோபோ சங்கர், கேபிஒய் வினோத், பிளாக் பாண்டி அகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்க, க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

Advertisment

ரோமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் பூஜை செப்டம்பர் 15ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.

வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பூஜையில் தயாரிப்பாளர் தாணு , ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.