ADVERTISEMENT

“இது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், எனக்கு ஆச்சரியமில்லை” - கௌதம் மேனன் பேச்சு

01:30 PM Sep 10, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடன இயக்குநர் பிருந்தா, அடுத்ததாக தக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஹிருது ஹரூன், பாபி சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கும் நிலையில், கதாபாத்திர அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் கௌதம் மேனன் பேசுகையில், “பிருந்தா ஒரு மான்ஸ்டர். நடுநிசி நாய்கள் தவிர என்னுடைய எல்லா படங்களிலும் அவர் பணியாற்றி இருக்கிறார். என்னுடைய பட பாடல்கள் சிறப்பாக வர நான் ஒரு சதவிகிதம் காரணம் என்றால் அவர்தான் 99 சதவிகிதம் காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளை அவர்தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருப்பது மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நான் மின்னலே இயக்கிவிட்டு காக்க காக்க இயக்கியதுபோல அவர் ஹே சினாமிகா இயக்கிவிட்டு தக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். பிருந்தா கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT