Advertisment

TNPL - லில் களமிறங்கிய கெளதம் மேனன் மகன்

gautham menon son arya yohan started new career tnpl

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகஅறிமுகமானவர் கௌதம் மேனன். இதனைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இயக்குநராக இருந்து வருகிறார்.

Advertisment

இதனிடையே இயக்குநர் கௌதம் மேனன் ப்ரீத்திஎன்ற பெண்ணைதிருமணம்செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யா யோஹன், துருவ், ஆதித்யா என்ற மூன்றுமகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆர்யா யோஹன் கிரிக்கெட் வீரராக களமிறங்கியுள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் டைட்டன்ஸ் அணியும்,நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

நெல்லைராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற கௌதம் மேனனின்மகன் ஆர்யா யோஹனின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆர்யா யோஹன் மூன்று ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன் ஒரு ரன் அவுட்டும்செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். பொதுவாக திரை பிரபலங்களின்வாரிசுகள் சினிமாவில் கால் பதிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் சில பிரபலங்களின் வாரிசுகள் மட்டும் விளையாட்டு, உள்ளிட்ட மற்ற துறைகளிலும் கால்பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

cricket gautham menon TNPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe