Advertisment

“எங்க லிஸ்ட்லேயே இல்ல..” - 'மல்லிப்பூ' பாடல் குறித்து கெளதம் மேனன்

gautham menon shares Mallipoo songs

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதே போன்று படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ‘மல்லிப்பூ’ பாடல் பலரது விருப்பப் பாடலாக மாறியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை நேற்று நடந்த சக்சஸ் மீட்டில் கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார்... “மல்லிப்பூ.. பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல் எங்களின் கதை களத்திலேயே இல்லை. ஏ.ஆர் ரஹ்மான் சார் தான், ‘இப்போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் உறவுகளுடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். அதே போன்றதொரு காட்சிதான் இந்த படத்தில் வருகிறது. அதை ஏன் நாம பாடலாக பண்ண கூடாது” என கேட்டு, அதுக்கு அப்புறம் தான் மல்லிப்பூ பாடல் உருவானது. இந்த பாடல் இன்று இவ்வளவு பெரிய ஹிட்டடிக்க ஒரே காரணம் ஏ.ஆர் ரஹ்மான் சார் தான்" என்றார்.

Advertisment

actor simbu gautham menon Vendhu Thanindhathu Kaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe