/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/61_29.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றி மாறன், நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில், நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார். நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
சத்தியமங்கலம் வனப்பகுதி, செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்திவந்த படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், ‘விடுதலை’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் கௌதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பை விரைந்து முடித்துவிட்டு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த படக்குழு ஆயத்தமாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)