Advertisment

Gautham Menon

‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

சமீபத்தில் இப்படத்திற்கு விடுதலை எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்துவரும் நிலையில், இயக்குநர் கௌதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உயரதிகாரி கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்து வருவதாகவும், படம் முழுவதும் திரையில் தோன்றும் வகையில் அவர் கதாபாத்திரத்தை வெற்றிமாறன் வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது செங்கல்பட்டு சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவரும் படக்குழு, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கி படத்தை நிறைவு செய்யத்திட்டமிட்டுள்ளது.