/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_321.jpg)
‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்க உள்ள படம் 'பத்து தல'. இது, கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். நடிகர் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக், கலையரசன், டிஜே, பிரியா பவானி சங்கர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், 'பத்து தல' படத்திற்கான வில்லன் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இயக்குநர் கௌதம் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)