தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் மேனன், 'குட்டி ஸ்டோரி' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார். மொத்தம், 4 பாகங்கள் கொண்ட இத்திரைப்படத்தில், ஒரு பகுதியை கௌதம் மேனன் இயக்க, எஞ்சிய மூன்று பகுதிகளை வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ள பகுதிக்கு 'எதிர்பாரா முத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.