sivakarthikeyan

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் மேனன், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கான முதற்கட்டப் படப்பிடிப்பை திருச்செந்தூரில் நிறைவு செய்துள்ள படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பைச் சென்னையில் நடத்திவருகிறது. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், ஐசரி கணேஷ் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இக்கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், கௌதம் மேனன் சிவகார்த்திகேயனைச் சந்தித்து கதை கூறியதாகவும் அக்கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருந்ததால் அவரும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தினை முடித்துவிட்டு அட்லீயின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களையும் நிறைவுசெய்த பிறகே கௌதம் மேனன் படத்திற்கு சிவகார்த்திகேயன் தேதி ஒதுக்க முடியுமென்பதால் இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.