Advertisment

ஜி.வி.பிரகாஷுடன் இணையும் கெளதம் மேனன்!

gesdf

ஜி.வி. பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில் வெளியான‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

மேலும் இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தை ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்த படமாக உருவாக்கி வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். மேலும் கரோனாவிற்கு பிறகு ஆரம்பமாகவுள்ள இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

Advertisment

gautham menon GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe