Advertisment

கௌதம் மேனனுக்கு விலக்களித்து நீதிமன்றம் உத்தரவு

gautham menon Income tax case update

இயக்குநர் கௌதம் மேனன்2011ம் ஆண்டு போட்டான் கதாஸ் புரொடக்‌ஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்தார். பின்பு 6 மாதங்களுக்கு பின் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து வருமான வரித்துறை2013 - 2014 ஆம் ஆண்டில் அந்த தயாரிப்பு நிறுவனம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக் கூறிநடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உதவி ஆணையர் புகாரும் அளித்தார்.

Advertisment

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக கௌதம் மேனன் பெயரும் சேர்க்கப்பட்டிருந்து. இதனால் எழும்பூர் நீதிமன்றம் கௌதம் மேனனை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அதில் ஒவ்வொரு முறையும் ஆஜராக விலக்கு கோரி கௌதம் மேனன் மனுத்தாக்கல் செய்தார். அவை ஏற்கப்பட்டு அவருக்கு விலக்கும் அளிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து கௌதம் மேனன்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், போட்டோன் கதாஸ் நிறுவனத்தில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும், அதனால் தனக்கு எதிராகத்தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தனக்கும்போட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனக்கெதிரான இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கௌதம் மேனனுக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு ஜூன் மாதத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

MADRAS HIGH COURT Income Tax gautham menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe