Advertisment

வடிவேலுவை இயக்கும் கௌதம் மேனன்?

Gautham Menon direct vadivelu next movie

Advertisment

இயக்குநர்கெளதம் மேனன் நடிகர் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தைஇயக்கி வருகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும்இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இயக்குநர் கெளதம் மேனன் வருண் நடிக்கும் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் அடுத்ததாக நடிகர் வடிவேலுவை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்துசமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கெளதம் மேனன், "நான் அடுத்ததாக வடிவேலுவை வைத்து படம் இயக்குவதாக இருக்கிறேன். அது நகைச்சுவை கலந்த காதல் படமாக இருக்கும், வடிவேலுதான் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும்" எனக் கூறியுள்ளார். மேலும் இப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலு தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

actor Vadivelu gautham menon Naai sekar returns
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe