இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் கெளதம் மேனன், கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது விக்ரமை வைத்து அவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று நடந்த இந்தியா - நியூசிலாந்து உலகக் கோப்பை 2023 முதல் அரை இறுதிப் போட்டியில், வர்ணனையாளர் ஆர்.ஜே. பாலாஜியிடம் பேசிய அவர், அடுத்ததாக கிரிக்கெட்டை மையப்படுத்தி ஒரு படம் இயக்கவுள்ளதாகத்தெரிவித்தார். மேலும் அந்தக் கதை இரண்டு நண்பர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் எப்படி கிரிக்கெட்டில் உயர்கிறார்கள் என்பது பற்றி இருக்குமெனவும், சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரது வாழ்க்கைதான் அந்தக் கதை எழுத உந்துதலாக இருந்தது எனவும் கூறினார்.