'ஜோஷுவா இமைபோல் காக்க' படத்தையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் இவர் தற்போது குயின் வெப் தொடரின் 2-ஆம் பாகத்தை இயக்க முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.சூர்யா படம் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் தள்ளிப் போவதால் கெளதம் மேனன் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gautham-menon-ramya-krishnan-join-hands-web-series-based-jayalalithaas-life.jpg)
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் கெளதம் மேனன் வெப் தொடராக இயக்கி வெளியிட்டார்.இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷணன் நடித்து இருந்தார். ஜெயலலிதாவின் அம்மா கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும்,எம்.ஜி.ஆர் வேடத்தில் இந்திரஜித் சுகுமாரனும் நடித்தனர்.ஜெயலலிதாவின் குழந்தை பருவம், கல்வி, வக்கீலாக வேண்டும் என்ற கனவு,எதிர்பாராமல் நடிகையானது, சினிமாவில் சந்தித்த சவால்கள் போன்றவை இந்தத் தொடரில் இருந்தன.மேலும் இந்தத் தொடர் எம்.ஜி.ஆரின் மரணத்தோடு முடிந்தது.இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது கெளதம் மேனன் இயக்கவிருக்கும் குயீன் 2ஆம் பாகத்தில் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை பதிவு செய்யப்படும் என்றும், இதிலும் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணனே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Follow Us